
அல்லாஹ்வின் இல்லத்திற்காக வாரி வழங்குங்கள்!
மஸ்ஜிதே அஹ்மது ஈஸா மற்றும் மதரஸாவின் விரிவாக்கத்திற்காக அருகிலுள்ள நிலத்தை வாங்க உங்கள் சதக்கா ஜாரியாவை வழங்கிடுங்கள்!
- மொத்த பங்குகள்
- 6,104
- பங்குகள் மீதம்
- 5,994
- ஒரு பங்குக்கு
- ₹ 1,000
وَمَا تُنفِقُوا مِنْ خَيْرٍ فَلِأَنفُسِكُمْ
படங்கள் மற்றும் வீடியோக்கள்
- 1,744 சதுர அடிவாங்கப்பட வேண்டிய அருகிலுள்ள நிலம்
- ₹3,500ஒப்புக்கொள்ளப்பட்ட சதுர அடி விலை
- ₹61,04,000நிலம் வாங்குவதற்கான மொத்தச் செலவு
அருகிலுள்ள நிலத்தை உறுதி செய்ய வரும் நாட்களுக்குள் தேவை.
இந்தப் பிரச்சாரம் பற்றி
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
🕌✨ அல்லாஹ்வின் இல்லத்திற்காக வாரி வழங்குங்கள்! ✨🕌
மஸ்ஜிதே அஹ்மது ஈஸா மற்றும் மதரஸாவின் விரிவாக்கத்திற்காக அருகிலுள்ள நிலத்தை வாங்க உங்கள் சதக்கா ஜாரியாவை வழங்கிடுங்கள்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ!
அன்பார்ந்த அல்லாஹ்வின் நல்லடியார்களே!
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பழைய பெருங்களத்தூர் பகுதியில் அமைந்துள்ள மஸ்ஜிதே அஹ்மது ஈஸா மற்றும் மதரஸா சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இன்ஷா அல்லாஹ், வரும் ரமலானுடன் இப்பள்ளிவாசல் மற்றும் மதரஸா தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன. அல்ஹம்துலில்லாஹ்!
இந்தப் பகுதியில் வசிக்கும் முஸ்லிம் குடும்பங்கள் பள்ளிவாசலுக்கும் மதரஸாவிற்கும் செல்வதற்காக வெகுதொலைவு செல்ல வேண்டிய சூழல் இருந்தது. இதனைக் கருத்தில் கொண்டு, அல்லாஹ்வின் கிருபையால் இடம் வாங்கப்பட்டு பள்ளிவாசல் அமைக்கப்பட்டு, இன்று பலருக்கும் பயனளிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.
📌 Google Maps Location
📹 https://www.youtube.com/@masjidhahmedeesa-waytopara-s3w
📢 தற்போது ஏன் கூடுதல் இடம் தேவைப்படுகிறது?
தற்போது சுமார் 1,450 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள பள்ளிவாசலில், குறிப்பாக ஜும்ஆ நாட்களிலும் முக்கியமான நிகழ்வுகளிலும் ஏராளமான மக்கள் ஒன்றுகூடி தொழுகை நடத்தி வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்!
இப்பகுதியில் முஸ்லிம் குடும்பங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில் தொழுகைக்கான இடவசதி மற்றும் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதியும் கூடுதலாகத் தேவைப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்தத் தேவையைக் கருத்தில் கொண்டு, பள்ளிவாசலுக்கு அருகிலேயே உள்ள நிலம் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. அந்த நிலத்தின் உரிமையாளரும் பள்ளிவாசலின் நலனைக் கருத்தில் கொண்டு குறைந்த விலையில் வழங்க முன்வந்துள்ளார். வல்ல அல்லாஹ் அவருக்கு நற்கூலியை வழங்குவானாக! ஆமீன்.
🎯 நமது இலக்கு – ₹61 லட்சம்
- 📐 நிலத்தின் பரப்பளவு: 1,744 சதுர அடி
- 💰 ஒரு சதுர அடியின் விலை: ₹3,500
- 🏦 மொத்த நிலத்தின் மதிப்பு: ₹61,04,000
🚨 முதல் கட்டமாக உடனடியாகத் தேவைப்படுவது: ₹30,52,000
நிலத்தை வாங்குவதற்கான முதல் கட்டத் தொகையாக வரும் சில நாட்களுக்குள் சுமார் 50% தொகையைச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
எனவே, இந்த நற்செயலை விரைந்து நிறைவேற்ற உங்கள் அனைவரின் பங்களிப்பும் மிகவும் அவசியமாக உள்ளது.
❤️ உங்கள் சதக்கா ஜாரியாவை வழங்குங்கள்!
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:
யார் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி ஒரு பள்ளிவாசலைக் கட்டுகிறாரோ, அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான்.
(நூல்: இப்னு மாஜா)
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே!
அல்லாஹ்வின் இல்லத்திற்காக நீங்கள் வழங்கும் ஒவ்வொரு பங்களிப்பும் நிரந்தர நன்மையைத் தேடித்தரும் சதக்கா ஜாரியாவாக அமையட்டும்.
நாம் வாழும் காலத்திலும், நம்முடைய மறைவிற்குப் பின்னரும் இந்தப் பள்ளிவாசலில் நடைபெறும் ஒவ்வொரு தொழுகை, குர்ஆன் ஓதுதல், மார்க்கக் கல்வி மற்றும் நற்செயல்களின் நன்மைகளில் அல்லாஹ் நமக்கும் பங்கினை வழங்குவானாக!
🌍 பள்ளிவாசலின் சமூகப் பணிகள்
மஸ்ஜிதே அஹ்மது ஈஸா அமைந்துள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம் அல்லாத குடும்பங்களுக்கும் அறக்கட்டளையின் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், இஸ்லாம் குறித்த சரியான புரிதலை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், இஸ்லாமிய அறிமுக நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு சமூக நலப்பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே, இந்தப் பள்ளிவாசலின் விரிவாக்கம் என்பது தொழுகைக்கான இடவசதியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், மார்க்கக் கல்வி, சமூக நலன் மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கான நற்பணிகளையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு முக்கியமான முயற்சியாகும்.
உங்களால் இயன்ற தொகையை வழங்குங்கள். உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் இந்த நற்செய்தியைப் பகிர்ந்து உதவிடுங்கள்.
வல்ல அல்லாஹ் உங்கள் செல்வத்திலும், வாழ்வாதாரத்திலும் பரக்கத் செய்வானாக! நீங்கள் வழங்கும் ஒவ்வொரு நன்கொடையையும் ஏற்றுக்கொண்டு மறுமையில் மகத்தான நற்கூலியை வழங்குவானாக! ஆமீன்.
📞 தொடர்புக்கு
- 95661 13437
- 90878 36393
- 94444 66410
நிர்வாகம்
AHMED EESA CHARITABLE TRUST
Reg. No: 366/BK4/2022
🕌 அல்லாஹ்வின் இல்லத்தை விரிவுபடுத்துவதில் நீங்களும் பங்கெடுங்கள்.
உங்கள் பங்களிப்பு மறுமைக்கான நிரந்தர சேமிப்பாக அமையட்டும்! 🤲
நன்கொடை அளிக்கும் வழிகள்
வங்கிப் பரிமாற்ற விவரங்கள்
- கணக்கின் பெயர்
- AHMED EESA CHARITABLE TRUST
- வங்கி
- AXIS BANK
- கணக்கு எண்
- 922020065044181
- IFSC குறியீடு
- UTIB0003905
- கணக்கு வகை
- CURRENT
- கிளை
- CHROMPET
UPI மூலம் நன்கொடை
- Google Pay / UPI எண்
- 8056699900
- UPI ஐடி
- mab.037244039050152@axisbank
மேலே உள்ள UPI ஐடி அல்லது எண்ணை நகலெடுத்து, ஏதேனும் UPI செயலியை (GPay, PhonePe, Paytm…) திறந்து செலுத்துங்கள்.
நன்கொடை அளிக்க ஸ்கேன் செய்யுங்கள்
Google Pay · PhonePe · Paytm · BHIM
முக்கியம்: NRI அல்லது வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் மூலம் பணம் அனுப்ப வேண்டாம். நன்கொடை அளித்த பின், ரசீது பெற உங்கள் பெயர் மற்றும் பரிவர்த்தனை விவரங்களை வாட்ஸ்அப்பில் பகிரவும்.
வாட்ஸ்அப்பில் பகிரவும்சமீபத்திய பங்களிப்புகள்
- A***1 பங்கு (₹ 1,000)நவ. 22
- F***100 பங்குகள் (₹ 1,00,000)நவ. 22
- H*** S***7 பங்குகள் (₹ 7,000)நவ. 22
- A*** S***1 பங்கு (₹ 1,000)நவ. 22
- U***1 பங்கு (₹ 1,000)நவ. 22
